பறவைகள் வழி அறிவது எப்படி? | பறப்பதுவே 20
குளிர்காலம் நெருங்குகிறது, பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றால், முன்கூட்டியே கொழுப்பு நிறைந்த சிறு பூச்சிகளையும் கொட்டைகளையும் கண்டறிந்து, சாப்பிட ஆரம்பிக்கின்றன.

பறவைகள் நீண்ட தூரம் பயணிக்கும்போது, நிறைய ஆற்றல் செலவாகும். அதற்காகப் பறவைகள் பலவிதங்களில் தங்களைத் தயார் செய்துகொள்கின்றன. குளிர்காலம் நெருங்குகிறது, பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றால், முன்கூட்டியே கொழுப்பு நிறைந்த சிறு பூச்சிகளையும் கொட்டைகளையும் கண்டறிந்து, சாப்பிட ஆரம்பிக்கின்றன. கார்போஹைட்ரேட், புரத உணவு வகைகளைவிடக் கொழுப்பு உள்ள உணவு வகைகள் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளன. இவற்றை உண்டு எடையை அதிகரித்துக் கொள்கின்றன.
சில பறவைகள் தங்கள் எடையை இரண்டு மடங்கு வரை அதிகரித்துக் கொள்கின்றன. 10 ஆயிரம் கி.மீ. தூரம் வலசை செல்லும் பட்டைவால் மூக்கன் (Bar-tailed Godwits), பயணத்துக்கு முன்பாக கணிசமாகத் தன் உடல் எடையை அதிகரித்துக்கொள்கிறது. இப்படி உடலில் சேகரிக்கப்படும் ஆற்றலை உபயோகித்து, உணவு இல்லாமல் பறவைகளால் நீண்ட தூரம் பறக்க முடியும். நிற்காமல் பறப்பதால் எடை குறைந்துகொண்டே வந்து, சேர வேண்டிய இடத்தை அடையும் போது முதலில் இருந்த எடைக்கு மாறிவிடும். இது போன்ற பறவைகளுக்கு வலசைக்கு முன் 30 - 100 சதவீதம்வரை உடல் எடை அதிகரிக்கும்.
What's Your Reaction?