ஓவியத் திறமையும் தொழில்நுட்பத் திறனும் கொண்டோருக்கான படிப்பு | புதியன விரும்பு 2.0 - 7
புராதனக் கட்டிடங்களைப் பாதுகாப்பது, ‘கிரீன் பில்டிங்’ என்கிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டிட வடிவமைப்பு, நகரங்களைத் திட்டமிடுதல், திறந்தவெளி வடிவமைப்பு போன்றவையும் கட்டிட வடிவமைப்பாளரின் பணிகளில் அடங்கும்.

அறிவியலும் கலைத்திறனும் இணைந்து பரிமளிக்கும் துறை ‘Architecture’ எனப்படும் கட்டிட வடிவமைப்பு. கலை ரசனையும் ஓவியத் திறமையும் கூடவே தொழில்நுட்ப அறிவும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமை களைப் புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருள்கள் தேவைப்படும், கட்டிடத்துக்கு எவ்வளவு காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கும் என்று பல்வேறு விஷயங்களையும் கருத்தில் கொண்டு கட்டு மான வடிவமைப்பைத் திட்டமிட வேண்டியது கட்டிட வடிவமைப்பாளர்களின் வேலை. புராதனக் கட்டிடங்களைப் பாதுகாப்பது, ‘கிரீன் பில்டிங்’ என்கிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டிட வடிவமைப்பு, நகரங்களைத் திட்டமிடுதல், திறந்தவெளி வடிவமைப்பு போன்றவையும் கட்டிட வடிவமைப்பாளரின் பணிகளில் அடங்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகத் திகழும் கிண்டி வளாகத்தில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் ஆர்கி டெக்சர் அண்ட் பிளானிங்’ கல்வி நிலையத்தில் பி.ஆர்க் படிக்கலாம். இது தவிர, பி.ஆர்க். படிக்க நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஐந்து ஆண்டு படிப்பில் சேர பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கட்டாயமாகப் படித்திருக்க வேண்டும்.
What's Your Reaction?