மணிவிழா கடந்தும் தொடரும் பந்தம் | வாசிப்பை நேசிப்போம்
நான் மூன்றாம் வகுப்பு படித்தபோதே வாசிப்பைப் பிடித்துவிட்டேன். என் பிடிக்குள் இருக்கும் வாசிப்புப் பழக்கம் மணி விழா கடந்தும் தொடர்கிறது.

நான் மூன்றாம் வகுப்பு படித்தபோதே வாசிப்பைப் பிடித்துவிட்டேன். என் பிடிக்குள் இருக்கும் வாசிப்புப் பழக்கம் மணி விழா கடந்தும் தொடர்கிறது. முதலில் அறிமுகமானாள் ‘ராணி’. புதன்தோறும் வருவாள். அதில், சிறுவர் பகுதியில் ஒரு பக்கத் தொடர் கதையை, மதியம் சாப்பிட வீட்டிற்கு வரும்போது, முதலில் நான்தான் படிப்பேன். பள்ளிக்குச் சென்றதும் வகுப்புத் தோழிகளுக்குச் சுடச்சுடக் கதை சொல்வது பேரானந்தம்.
மேல்நிலை வகுப்பில் வாசிப்பை வளர்ப்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கதைப் புத்தகங்கள் தருவார்கள். மற்றவர்களின் புத்தகங்களையும் இரவல் வாங்கி வாசிப்பேன். அப்போது, தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார் நாவல்களுக்கு டிமாண்ட் அதிகம். அதில் வரும் இந்திரா, மைனா, கத்தரிக்காய் பாத்திரங்களும், குளுக்கோஸ் மாத்திரையும் இன்றும் நினைவில் உள்ளன. சங்கர்லால் ‘டீ’தான் குடிப்பார். ‘எனக்கு டீதான் பிடிக்கும்’ எனத் தோழிகளிடம் சொல்லும்போது, “நீ என்ன துப்பறியும் சங்கர்லாலா?” என்று கேட்பார்கள். எஸ்எஸ்எல்சி முடித்ததும் திருமணத்திற்கு முன் நிறைய வாசித்தேன்.
What's Your Reaction?