முன்னோடித் துணைவேந்தர் | வே.வசந்தி தேவி அஞ்சலி
அறத்தை நோக்கிய பயணமும், தைரியமும், சமூகத்தின் மீதிருந்த அன்பும்தான் அவர் பணியிலிருந்த ஆறாண்டுக் காலத்தில் செயற்கரிய செயல்களைச் செய்ய வைத்தது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1990ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பேராசிரியர் வசந்தி தேவி 1992இல் துணைவேந்தர் ஆனார். அறத்தை நோக்கிய பயணமும், தைரியமும், சமூகத்தின் மீதிருந்த அன்பும்தான் அவர் பணியிலிருந்த ஆறாண்டுக் காலத்தில் செயற்கரிய செயல்களைச் செய்ய வைத்தது. அங்கு அவர் மேற்கொண்ட முக்கியப் பணிகளில் சிலவற்றை, பேராசிரியர் வ.பொன்னுராஜ் பகிர்ந்துகொண்டார்.
கல்வி முன்னோடி: இன்றைக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்பது, மறுமதிப்பீட்டு விண்ணப்பம் செய்வது, முந்தைய மதிப்பீடு சரியில்லை என்றால் அதிக மதிப்பெண் பெறுவதும் இயல்பாக நடக்கின்றன. இதற்கான முன்னோடி வசந்தி தேவி. அவர்தான் இந்த முறையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்தார். ஆசிரியர்களின் முழு ஒப்புதலோடு இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தார்.
What's Your Reaction?