சூப்பர் ஸ்டார் மேன் ஓ’வார் | வரலாறு முக்கியம் மக்களே! - 16
‘ஐந்து லட்சம் டாலர் தருகிறேன்’ என்றார் வில்லியம் வேகனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மாபெரும் பணக்காரர். பந்தயக் குதிரைகள் மீது விருப்பம் கொண்டவர்.

‘ஐந்து லட்சம் டாலர் தருகிறேன்’ என்றார் வில்லியம் வேகனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மாபெரும் பணக்காரர். பந்தயக் குதிரைகள் மீது விருப்பம் கொண்டவர். அன்றைய உலகின் மதிப்புமிக்க பந்தயக் குதிரையைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.
‘இந்தக் காசோலையைப் பிடியுங்கள். அதில் என்ன தொகை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். மேன் ஓ’வாரை எனக்குத் தந்துவிடுங்கள்’ என்று வேகனர் ஆர்வத்துடன் கேட்டார். ரிடில், ‘நான் இந்தக் குதிரையை யாருக்கும் விற்பதாக இல்லை’ என்றார்.
What's Your Reaction?