‘ஷிஃப்ட்’ முறையில் கல்லூரி… மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
90களின் ஆரம்பத்தில் கல்லூரியில் வணிகவியல் (B.Com.) என்பது ஒரு பாடத் திட்டமாக இருந்தது. இன்று, வணிகவியல் பாடத்தின் கீழ் Computer Applications, Profes sional Accounting, International Accounting, Business Analytics என அத்தனை உட்பிரிவுகள்.

90களின் ஆரம்பத்தில் கல்லூரியில் வணிகவியல் (B.Com.) என்பது ஒரு பாடத் திட்டமாக இருந்தது. இன்று, வணிகவியல் பாடத்தின் கீழ் Computer Applications, Profes sional Accounting, International Accounting, Business Analytics என அத்தனை உட்பிரிவுகள். ஒவ்வொரு பாடத்திட்டத்தின் கீழ், உட்பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை 60 என்கிற போதும், உட்பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், மாணவர் சேர்க்கை விகிதம் ஐந்து முதல் ஆறு மடங்கு பெருகியுள்ளது. இதனால் கல்லூரிகள் ‘ஷிப்ஃட்’ அடிப்படையில் வகுப்புகளைப் பிரித்து நடத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.
வேலை கிடைக்கிறதா? - கல்லூரிகளில் புதிய பாடத்திட்டங்கள் வருவதும், நிறைய மாணவர்கள் சேர்ந்து படிப்பதும் ஆரோக்கியமானதுதானே என்கிற கேள்வி எழலாம். ஆனால், பிரச்சினை அதுவல்ல. இந்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளால் எவ்வாறு பட்டை தீட்டப்படுகிறார்கள் என்பதே பிரச்சினை. அனைவருக்கும் பட்டம் கிடைக்கிறதே தவிர, நல்ல வேலை கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
What's Your Reaction?