ஸ்விஸ் எனும் சொர்க்கம் 22: பிரமிக்கவைத்த ‘கிளேசியர் 3000’

இரண்டு மலைச் சிகரங்களுக்கு நடுவே அமைந்த உலகின் முதல் தொங்கு பாலம். இதில் நடப்பது  ‘திரில்’லாக இருந்தது என்றாலும் கடினமாக இல்லை.

Nov 21, 2024 - 17:40
 0  11
ஸ்விஸ் எனும் சொர்க்கம் 22: பிரமிக்கவைத்த ‘கிளேசியர் 3000’

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலை பல இடங்களில் திடீரென்று தோன்றி கண்ணாமூச்சி காட்டும், விளையாடும், நம்மை வியக்க வைக்கும். ஆனால் ஆல்ப்ஸ் மலையின் மையமாக வைத்து சுவிட்சர்லாந்தில் சில இடங்களுக்குப் பயணம் ஆனோம். அவற்றில் மிக முக்கியமான ஒன்று ‘கிளேசியர் 3000.’

இரண்டு முறை அந்த இடத்துக்குக் கிளம்புவதாக இருந்து திட்டத்தை ரத்து செய்துவிட்டு மூன்றாவது முறைதான் கிளம்ப முடிந்தது. காரணம் முதல் இரண்டு முறையிலும் லேசான மேகமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆரூடம் கூறப்பட்டது. “மேகம் சூழ்ந்து இருந்தால் பனிமலையைத் தெளிவாகப் பார்க்க முடியாது. நாம் செல்வது வீணாகிவிடும்” என்று மகன் அழுத்தமாகக் கூறிவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow