சிரி... சிரி... சிரி... | கதை
கரடியின் முதுகில் லேசாகத் தட்டிவிட்டு மரத்தின் மீது ஏறிக்கொண்டது குரங்கு. கோபம் அடைந்த கரடி, மரத்திலேறி அதைப் பிடிக்க முயற்சி செய்தது. ஆனால், குரங்கு சட்டென்று இன்னொரு மரத்துக்குத் தாவிவிட்டது.

கரடியின் முதுகில் லேசாகத் தட்டிவிட்டு மரத்தின் மீது ஏறிக்கொண்டது குரங்கு. கோபம் அடைந்த கரடி, மரத்திலேறி அதைப் பிடிக்க முயற்சி செய்தது. ஆனால், குரங்கு சட்டென்று இன்னொரு மரத்துக்குத் தாவிவிட்டது. அந்த மரத்தில் இருந்துகொண்டு கரடியைப் பயமுறுத்துவது போலச் சத்தமாகச் சிரித்தது குரங்கு. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரி விழுந்து விழுந்து சிரித்தது. கரடியின் கோபம் இன்னும் அதிகமானது.
நரிக்கு அருகில் இருந்த ஆமை சிரிக்காமல் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தது. ‘என்ன, நாம இவ்வளவு குறும்பு செய்தும் இந்த ஆமை சிரிக்க மாட்டேங்கிறதே... என்ன செய்வது?’ என்று யோசித்தது குரங்கு. குரங்கு இருக்கும் மரத்துக்கு அருகே வந்த நரி, “நீ செய்யும் சேட்டைகளால் கவலைகள் மறந்து சிரித்தேன். நீ ஏன் திடீரென்று கவலையோடு உட்கார்ந்திருக்கிறாய்? உன்னுடன் நட்புகொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன். என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?” என்று கேட்டது.
What's Your Reaction?