சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘சிவ சிவ’ முழக்கத்துடன் நடராஜ பெருமானை தரிசித்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ நிகழ்வு கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு ரதஙகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
What's Your Reaction?