ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Jul 22, 2025 - 14:30
 0  4
ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடு

ராமேசுவரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தாண்டு ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை (ஜூலை 24) கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் வீதி உலா முடிந்து, ராமநாதபுரம் சமஸ்தான மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 11 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா மற்றும் லட்சுமணருடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலிப்பர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow