ஏழுமலையான் கோயிலில் கொட்டும் மழையில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் உலா

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவ மூர்த்தியான மலையப்பர், சூரிய நாராயணராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Nov 11, 2024 - 15:43
 0  4
ஏழுமலையான் கோயிலில் கொட்டும் மழையில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் உலா

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவ மூர்த்தியான மலையப்பர், சூரிய நாராயணராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன சேவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே திருமலையில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சூரிய பிரபை வாகன சேவை சிறிது நேரம் வரை கூடாரம் தாங்கியபடி நடத்தப்பட்டது. அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வாகன சேவைக்கு முன், காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்களும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்களும், ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகளும். திரளான பக்தர்களும் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow