கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

கொடைக்கானல் மலைப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள ஆப்பிள் மரங்களில் காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. நம் நாட்டில் காஷ்மீர், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது.

Jun 27, 2025 - 14:35
 0  3
கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள ஆப்பிள் மரங்களில் காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. நம் நாட்டில் காஷ்மீர், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. கொடைக்கானல் மலையில் நிலவும் தட்பவெப்ப நிலையில் ஆப்பிள் விளையுமா என்ற சந்தேகத்தை தீர்க்கும் வகையில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முறையில் ஆப்பிள் மரக்கன்றுகள் நடப்பட்டன. சில ஆண்டுகளில் அவை காய்க்க தொடங்கின. அதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கும் ஆப்பிள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இது தவிர, மேல்மலை கிராமங்களில் விவசாயிகள் சிலர் காஷ்மீரில் இருந்து வாங்கி வந்த ஆப்பிள் மரக்கன்றுகளை நட்டனர். தற்போது சீசனையொட்டி, ஆப்பிள் மரங்களில் காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. அதனை உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow