ஜிஎஸ்டி வரியை குறைக்க திட்டம்: கார், மொபைல்போன், கணினி விலை குறையும்

ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்​திய நிதி​யமைச்​சகம் திட்​ட​மிட்டு உள்​ளது. இதன்​படி கார், மொபைல்​போன், கணினி உள்​ளிட்ட பொருட்​களின் விலை கணிச​மாக குறை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Aug 19, 2025 - 07:15
 0  16
ஜிஎஸ்டி வரியை குறைக்க திட்டம்: கார், மொபைல்போன், கணினி விலை குறையும்

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்​திய நிதி​யமைச்​சகம் திட்​ட​மிட்டு உள்​ளது. இதன்​படி கார், மொபைல்​போன், கணினி உள்​ளிட்ட பொருட்​களின் விலை கணிச​மாக குறை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த 15-ம் தேதி டெல்லி செங்​கோட்​டை​யில் சுதந்​திர தின உரை​யாற்​றிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும் என்று அறி​வித்​தார். இப்​போது ஜிஎஸ்டி கட்​டமைப்​பில் 5%, 12%, 18%, 28% என 4 வரி அடுக்​கு​கள் உள்​ளன. பிரதமர் மோடி​யின் அறி​விப்​பின்​படி இனிமேல் 5%, 18% என்ற இரு வரி அடுக்​கு​கள் மட்​டுமே இருக்​கும். சில ஆடம்பர பொருட்​களுக்கு மட்​டும் 40% வரி விதிக்​கப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow