காஞ்சிபுரம் ஜரிகை ஆலை பொலிவுடன் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்
தமிழ்நாடு ஜரிகை லிமிடெட் காஞ்சிபுரத்தில் 1974-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் ஜரிகை மார்க் (242 கிராம்) விலை தற்போது ரூ.23,075-க்கு விற்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் இயங்கும் தமிழ்நாடு ஜரிகை ஆலை பொலிவுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஜன.22-ம்தேதியிட்ட இதழில் பொலிவை இழக்கும் ஜரிகை உற்பத்தி: ஆலையை மீட்க என்ன வழி? என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அளித்துள்ள விளக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஜரிகை லிமிடெட் காஞ்சிபுரத்தில் 1974-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் ஜரிகை மார்க் (242 கிராம்) விலை தற்போது ரூ.23,075-க்கு விற்கப்படுகிறது. இதன் விலை நாள் தோறும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்படும் மாற்றத்துக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
What's Your Reaction?