12 மலைக் கிராமங்களில் மலைவாழ் குழந்தைகள் கல்விக்கு ‘ஒளியேற்றும்’ மகளிர்!
தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் மலைவாழ் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் பணியில் ஓசூரைச் சேர்ந்த மகளிர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓசூர்: தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் மலைவாழ் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் பணியில் ஓசூரைச் சேர்ந்த மகளிர் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
இக்கிராம மக்கள் பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ளனர். மேலும், இக்கிராமங்களில், சாலை, குடிநீர், மின் விளக்கு, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், இக்கிராமங்களில் கல்வி, மருத்துவம் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இக்கிராமங்கள் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதாலும், வனங்கள், மலைகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதாலும், அரசின் கவனமும் இக்கிராம மக்களுக்கு கிடைப்பதில்லை.
What's Your Reaction?