‘வேலை பார்த்து சோர்வடைந்துவிட்டேன்... ரூ.2.5 கோடி சேமிப்புடன் ஓய்வு பெறலாமா?’ - ஆலோசனை கேட்கும் மனிதர்

இந்தியாவைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் ரெட்இட் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: எனக்கு தற்போது 42 வயதாகிறது. திருமணம் செய்துகொள்ளவில்லை.

Apr 17, 2025 - 10:45
 0  3
‘வேலை பார்த்து சோர்வடைந்துவிட்டேன்... ரூ.2.5 கோடி சேமிப்புடன் ஓய்வு பெறலாமா?’ - ஆலோசனை கேட்கும் மனிதர்

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் ரெட்இட் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: எனக்கு தற்போது 42 வயதாகிறது. திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னுடைய குடும்பத்தில் யாருமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே பெற்றோர் இறந்துவிட் டனர். இனியும் திருமணம் செய்துகொள்ளும் திட்டமில்லை.

எனக்கு சொந்தமாக வீடோ, காரோ இல்லை. மேலும் என்னிடம் ரூ.2.5 கோடி சேமிப்பு (பிக்ஸட் டெபாசிட்) உள்ளது. கடனும் கிடையாது. நான் அமெரிக்காவில் சில காலம் பணியாற்றினேன். இதன்மூலம் எனக்கு 62 வயதாகும் போது மாதம்தோறும் 1,000 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்து சோர்வடைந்து விட்டேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow