கற்கும் திறன் | பறப்பதுவே 25
‘பறவையாக இருந்தால் சட்டென்று பறந்துவிடலாம்’ என்று நாம் எளிதாகச் சொல்லிவிடுவோம். ஆனால், பறப்பது பறவைகளுக்கே எளிதல்ல. அது ஒரு கற்றல் பயணம். பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்குப் பலவிதங்களில் கற்றுக் கொடுக்கின்றன.

‘பறவையாக இருந்தால் சட்டென்று பறந்துவிடலாம்’ என்று நாம் எளிதாகச் சொல்லிவிடுவோம். ஆனால், பறப்பது பறவைகளுக்கே எளிதல்ல. அது ஒரு கற்றல் பயணம். பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்குப் பலவிதங்களில் கற்றுக் கொடுக்கின்றன. சில பறவைகள் மனிதர் களைப் போலவே சிக்கலான முறைகளில் கற்பிக்கின்றன. சில பறவைகள் தானாகவே கற்றுக் கொள்கின்றன.
இன்னும் சில பறவைகள் மற்ற பறவைகளிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. கூட்டமாக வாழும் பறவைகளும் தனித்து வாழும் பறவைகளும் வெவ்வேறு வழிகளில் கற்பிக்கின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்குப் பெற்றோர்தான் உணவை ஊட்டிவிட வேண்டும். குஞ்சுகள் பிறந்தவுடன் முதல் செயல் தாயைப் பின்தொடர்தல்தான். இது வாத்து, அன்னம் போன்ற பறவைகளில் அதிகம் காணப்படுகிறது.
What's Your Reaction?