பலூனில் பறந்த ஆடு! | வரலாறு முக்கியம் மக்களே! - 11
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரெஞ்சு மக்கள் பாரிஸில் கூடியிருந்தனர். அரசர் பதினான்காம் லூயி, தன் அரசி மேரியுடன் வந்திருந்தார். எல்லாரும் அந்த அதிசய நிகழ்வுக் காகக் காத்திருந்தனர்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரெஞ்சு மக்கள் பாரிஸில் கூடியிருந்தனர். அரசர் பதினான்காம் லூயி, தன் அரசி மேரியுடன் வந்திருந்தார். எல்லாரும் அந்த அதிசய நிகழ்வுக் காகக் காத்திருந்தனர். பிரான்ஸைச் சேர்ந்த ஜோசப் மாண்ட்கோல்ஃபயர், ஜேக்ஸ் மாண்ட்கோல்ஃபயர் சகோதரர்கள் ராட்சச பலூன் ஒன்றைத் தயாராக வைத்திருந்தனர். இது எப்படி வானில் பறக்கும்? மேலே செல்லச் செல்ல வெடித்துவிடுமோ? மேலே சென்ற பலூனைக் கீழே இறக்க முடியுமா என்று எல்லாம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியபடி கூட்டம் காத்திருந்தது.
ராட்சச பலூன்களைக் கொண்டு வானில் பறக்கும் முயற்சிகள் வரலாற்றில் நீண்ட காலமாகவே நடைபெற்று வந்தன. ஆனால், அதுவரை யாராலும் அதை வெற்றிகரமாக, நீண்ட தூரத்துக்குப் பறக்க வைக்க இயலவில்லை. 1783ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று மாண்ட்கோல்ஃபயர் சகோதரர்கள் பறப்பதற்கான பலூனைத் தயாராக வைத்திருந்தாலும், பலூனுக்குள் ஏறுவதற்குத் தயாராக இல்லை. உயிர் மீதிருந்த பயம். ஆனால், யாரையாவது பலூனில் ஏற்றி அனுப்பினால்தானே சாதனைக்கு மதிப்பு.
What's Your Reaction?