நாட்டுக்கோழி வளர்ப்பில் சாதனை | வாழ்ந்து காட்டுவோம்!

என் பெயர் இந்திராணி. திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், இராமநாதபுரம் ஊராட்சியில் வசித்து வரும் நான், ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன்

Mar 23, 2025 - 10:45
 0  4
நாட்டுக்கோழி வளர்ப்பில் சாதனை | வாழ்ந்து காட்டுவோம்!

என் பெயர் இந்திராணி. திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், இராமநாதபுரம் ஊராட்சியில் வசித்து வரும் நான், ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் குடும்பச் சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாமல் என் சொந்த நிலத்தில் விவசாயம் செய்துவந்தேன். எங்கள் பகுதியில் செயல்படும் சாந்தி மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளதுடன், வாழ்ந்து கட்டுவோம் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 60 உறுப்பினர்களைக் கொண்ட இராமநாதபுரம் உழவர் உற்பத்தியாளர் குழுவிலும் உறுப்பினராக உள்ளேன். இந்த உழவர் உற்பத்தியாளர் குழுவைத் தொடங்க, தொடக்க நிதியாக ரூ.75,000 வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வழிகாட்டுதலில் இராமாநாதபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சார்பில் நரியம்பள்ளி கிராமத்தில் சமுதாயப் பயிற்றுநர் கலாமணி, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சியை வழங்கினார். என்னுடன் சேர்ந்து எங்கள் உழவர் குழுவைச் சேர்ந்த 30 பேர் பயிற்சி பெற்றனர். பாதுகாப்பான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு, நோய்த்தொற்றுகளைச் சரிசெய்யும் வழிமுறைகள், குஞ்சு பொறிக்கும் முறை போன்றவை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow