ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் பிரபாஸ் 3 படங்களுக்கு ஒப்பந்தம்!

நடிகர் பிரபாஸ் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படங்கள் 2026, 2027, 2028  ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Nov 11, 2024 - 16:14
 0  3
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் பிரபாஸ் 3 படங்களுக்கு ஒப்பந்தம்!

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் 3 படங்கள் நடித்து கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படங்கள் 2026, 2027, 2028 ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் வெளியான ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’, ‘காந்தாரா’, ‘சலார் 1’ படங்களை தயாரித்து வசூலில் வெற்றி கண்டது ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக ‘காந்தாரா 2’, ‘சலார் 2’, ‘கேஜிஎஃப் 3’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில், இந்நிறுவனத்துடன் 3 படங்களில் நடிக்க நடிகர் பிரபாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பாக ஹோம்பாலே நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் அடுத்த 3 திரைப்படங்களுக்காக நடிகர் பிரபாஸுடன் இணைகிறோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow