“ஆம், நான் சிகிச்சையில்தான் இருக்கிறேன்” - சிவராஜ் குமார் பகிர்வு

 “உடல் நல பிரச்சினை காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள போகிறேன்” என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். 

Nov 11, 2024 - 16:14
 0  3
“ஆம், நான் சிகிச்சையில்தான் இருக்கிறேன்” - சிவராஜ் குமார் பகிர்வு

பெங்களூரு: “உடல் நல பிரச்சினை காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள போகிறேன்” என கன்னட நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ள ‘பைரதி ரணகல்’ (Bhairathi Ranagal) கன்னட திரைப்படம் வரும் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே சிவராஜ் குமார் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான சூழலில், படத்தின் புரொமோஷனுக்கான நேர்காணலில் தனது உடல் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார் சிவராஜ்குமார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நானும் மனிதன்தான். எனக்கும் உடல் நல பிரச்சினைகள் உண்டு. அதற்காக நான் சிகிச்சை பெற்று வருகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow