ஹாலிவுட் பார்வை | தலைமுறைகள் தாண்டிய போர்
உலகளாவிய திரைப்பட ரசிகர்களால் PTA என்று கொண்டாடப்படுபவர் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் பால் தாம்சன் ஆண்டர்சன் (PAUL THOMAS ANDERSON). இது வரை எடுத்த 9 படங்களுக்கு 11 ஆஸ்கர் பரிந்துரைகள் பெற்றுள்ளன.

போர் என்பது இரு நாடுகளுக்கு இடையே மட்டும் நடப்பதில்லை. ஏற்றுக்கொண்ட கொள்கைகள், ஆதிக்கத்தின் அத்துமீறல்கள், அதிகாரத்தில் படிநிலை உயர்வு மற்றும் பதின்பருவ குழந்தை வளர்ப்பு கூட ஒரு விதத்தில் போர் தான். இப்படியான பல்வகை போர்களின் பின்னணியில் வெளிவந்திருக்கும் அட்டகாசமான திரைப்படம் தான் 'ஒன் பாட்டில் ஆஃடர் அனதர்’ (ONE BATTLE AFTER ANOTHER).
புலம்பெயர் அகதிகளை காக்கும் போராளிகள் குழுவொன்று அதிகார வர்க்கத்தை எதிர்த்து போரிடுகிறது. இக்குழுவின் தலைவியான பெர்பீடியாவும் அவளின் துணைவனும் ஆன பாப் பல்வேறு தாக்குதல்கள் நிகழ்த்துகின்றனர். இதனிடையே பெர்பீடியாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. பின்னர், பெர்பீடியா ராணுவத்திடம் பிடிபட, பாப் குழந்தையுடன் தப்பித்து செல்கிறான். இவர்களை பழி தீர்க்கவும், அதிகாரத்தின் படிநிலையில் மேலேறவும் விரும்பும் கலோனல் லாக்ஜா இவர்களை தேடுகிறார். 16 வருடங்கள் கழித்து இந்த தேடுதல் வேட்டை என்னவாகிறது என்பதை சுவாரசியமாக படைக்கப்பட்டிருக்கிறது.
What's Your Reaction?