‘ஹரிஹர வீரமல்லு’ படம் எப்படி? - வரலாற்றின் மீது கற்பனையின் சுமை!
தெலுங்குப் படவுலகின் முன்னணி மாஸ் ஹீரோ, ஜனசேனா கட்சியின் தலைவர், ஆந்திராவின் துணை முதல்வர் என அடுத்தடுத்த உச்சங்களைத் தொட்டு நிற்பவர் பவன் கல்யாண்.

தெலுங்குப் படவுலகின் முன்னணி மாஸ் ஹீரோ, ஜனசேனா கட்சியின் தலைவர், ஆந்திராவின் துணை முதல்வர் என அடுத்தடுத்த உச்சங்களைத் தொட்டு நிற்பவர் பவன் கல்யாண். அவரது நடிப்பில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருந்த படம். இவ்வளவு காலம் ரசிகர்களைக் காக்க வைத்ததற்கான காரணம் படத்தில் இருக்கிறதா என்றால், ஆம்! இல்லை! என்கிற கலவையான உணர்வைத் தருகிறது படம்.
செல்வந்தர்களிடம் திருடி, ஏழை மக்களுக்குக் கொடுக்கும் ஒரு நாட்டுப்புறத்து வீரன் ஹரிஹர வீரமல்லு. டெல்லியைத் தலைநகராக்கி அரசாளும் பேரரசன் ஔரங்கசீப் அமரும் சிம்மாசனத்தில் உள்ள கோகினூர் வைரத்தைத் திருடிக்கொண்டு வருவதற்காக அமர்த்தப்படும் குழுவுக்குத் தலைமை வகிக்கிறான். டெல்லியை நோக்கி முன்னேறும் பயணத்தில் சாமானிய இந்துக்கள் ஒடுக்கப்படுவதைக் காணும் அவன், ஔரங்கசீப்பின் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்யும் ஒரு வீரம் செறிந்த புரட்சியாளனாக மாறுகிறான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையிலிருந்து வேறொரு வேலையை அவன் விரும்பாமலேயே கையிலெடுக்கும்போது என்ன நடக்கும் என்பதை நோக்கி இப்படத்தின் முதல் பாகம் முடிக்கப்பட்டிருக்கிறது.
What's Your Reaction?