வலியின் மொழி சிரிப்பு!
‘பாகுபலி’ போன்று உலகையே தனது சந்தையாக்கிக்கொண்ட படங்கள் தெலுங்கு மெயின் ஸ்ட்ரீம் சினிமாவின் தற்போதைய முதன்மை அடையாளம். இன்னொரு பக்கம் ரயிலையே தன் புஜ பலத்தால் நிறுத்தும் கோமாளி மாஸ் ஹீரோ படங்களையும் அங்கே ஓட வைப்பார்கள்.

‘பாகுபலி’ போன்று உலகையே தனது சந்தையாக்கிக் கொண்ட படங்கள் தெலுங்கு மெயின் ஸ்ட்ரீம் சினிமாவின் தற்போதைய முதன்மை அடையாளம். இன்னொரு பக்கம் ரயிலையே தன் புஜ பலத்தால் நிறுத்தும் கோமாளி மாஸ் ஹீரோ படங்களையும் அங்கே ஓட வைப்பார்கள். அதே தெலுங்கு மொழியில் உருவான ‘சினிமா பண்டி’ (2021) போன்ற சுயாதீன சினிமாக்கள் திரையரங்கில் ஆதரிக்கப்படாமல் ஓடிடியில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
கிராமிய ஆந்திராவில் வீரபாபு ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவர் தற்செயலாக ஒரு விலையுயர்ந்த டிஜிட்டல் கேமராவைக் கண்டெடுக்கிறார். முதலில் அதை விற்றுவிடத் தீர்மானித்தவர், பிறகு அந்தக் கேமராவை வைத்துத் திரைப்படம் எடுக்க முடிவு செய்கிறார். உள்ளூர் திருமண ஒளிப்படக்காரரான கணபதியை கேமராமேன் ஆக்குகிறார்.
What's Your Reaction?