வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாக பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக விழா (வசந்த உற்சவம்) 31-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புஷ்ப அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
What's Your Reaction?