திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Jul 14, 2025 - 10:25
 0  4
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதனை முன்னிட்டு ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பில் ராஜகோபுரத்தில் 7 தங்க கலசம், அம்பாள் சன்னதியில் 1 தங்கக் கலசம், கணபதி கோயில் 1 கலசம் உள்பட 9 கலசங்கள் உள்பட 20 திருப்பணிகள் நடந்துள்ளன. உபயதாரர் மூலம் ரூ.70 லட்சத்தில் ராஜகோபுர திருப்பணிகள் நடந்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow