சபரிமலையில் நெரிசல் அதிகரிப்பு: 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தரிசனத்துக்கான நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக உயர்ந்துள்ளது. எருமேலியிலேயே வாகனங்களை நிறுத்தவும் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது.

Dec 10, 2024 - 20:05
 0  6
சபரிமலையில் நெரிசல் அதிகரிப்பு: 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

தேனி: சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தரிசனத்துக்கான நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக உயர்ந்துள்ளது. எருமேலியிலேயே வாகனங்களை நிறுத்தவும் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதியில் இருந்து மண்டல கால பூஜைக்கான வழிபாடுகள் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய், சந்தனஅபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பின்பு 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையைச் சுற்றிலும் மழை பெய்ததால் கடுங்குளிர் நிலவியது. இதனால் பக்தர்களின் வருகை குறைந்தது. தற்போது மிதமான வெயிலுடன் கூடிய காலநிலை நிலவுவதால் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாய் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow