இந்தியாவின் சுபான்ஷு சுக்லா பயணிக்கும் ‘ஆக்சியம்-4’ விண்வெளித் திட்டம் ஒருநாள் தள்ளிவைப்பு

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Jun 9, 2025 - 22:55
 0  2
இந்தியாவின் சுபான்ஷு சுக்லா பயணிக்கும் ‘ஆக்சியம்-4’ விண்வெளித் திட்டம் ஒருநாள் தள்ளிவைப்பு

புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோசமான வானிலை காரணமாக, ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, ஜூன் 10-ம் தேதியில் இருந்து ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஓடம் ஜூன் 11-ம் தேதி, இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புறப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow