வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.8-ம் தேதி வரை நடைபெறும்.

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப்பெருவிழா நேற்று மாலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.8-ம் தேதி வரை நடைபெறும்.
அதன்படி, நடப்பாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, பேராலய முகப்பில் கொடி ஊர்வலம் தொடங்கி, பேராலயத்தைச் சுற்றிலும் குவிந்திருந்த பக்தர்களுக்கு மத்தியில் நடைபெற்றது. தொடர்ந்து, கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாகச் சென்ற கொடி ஊர்வலம் மீண்டும் பேராலயத்தை அடைந்தது.
What's Your Reaction?