பக்தர்கள் அனுபவம் பகிர வடபழனி முருகன் கோயிலில் மின்னணு ஆலோசனை பெட்டி
பக்தர்கள் தங்களது தரிசன அனுபவத்தை தெரிவிக்க, வடபழனி முருகன் கோயிலில் மின்னணு ஆலோசனை பெட்டி வசதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: பக்தர்கள் தங்களது தரிசன அனுபவத்தை தெரிவிக்க, வடபழனி முருகன் கோயிலில் மின்னணு ஆலோசனை பெட்டி வசதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, “தமிழகத்தில் 48 முதுநிலை கோயில்களில் பக்தர்கள் தங்களது தரிசன அனுபவம் குறித்த மதிப்பீட்டினை அளிக்கும் வகையில் மின்னணு ஆலோசனை பெட்டிகள் வைக்கப்படும். சென்னை வடபழனி முருகன் கோயிலில் மூலவர் சன்னதி மரக்கதவில் வெள்ளித் தகடு போர்த்தும் திருப்பணி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
What's Your Reaction?