கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.150-க்கு விற்பனை

தமிழகத்தில் பருவமழை காரணமாக உற்பத்தி இல்லாதது, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்டது போன்ற காரணங்களால் அதன் விலை உயர்ந்தது

Dec 15, 2024 - 09:20
 0  4
கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.150-க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ.150 ஆக குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.400 வரை உயர்ந்தது. சில்லறை விற்பனை சந்தைக்களில் கிலோ ரூ.450 வரை விற்கப்பட்டது. தமிழகத்தில் பருவமழை காரணமாக உற்பத்தி இல்லாதது, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்டது போன்ற காரணங்களால் அதன் விலை உயர்ந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow