ஒரு பவுன் ரூ.85,600: மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை - காரணம் என்ன?

இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (செப்.29) புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Sep 29, 2025 - 10:15
 0  3
ஒரு பவுன் ரூ.85,600: மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை - காரணம் என்ன?

சென்னை: இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (செப்.29) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்வதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow