ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் எஃப்.பி.ஓ-வுக்கு சிஐஐ தேசிய விருது
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில், கர்நாடகாவின் குடகு பகுதியில் இயங்கி வரும், பொன்னாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு சந்தைகள் இணைப்பு பிரிவில் ‘FPO எக்ஸலன்ஸ் விருது’வழங்கப்பட்டது.

கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில், கர்நாடகாவின் குடகு பகுதியில் இயங்கி வரும், பொன்னாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு சந்தைகள் இணைப்பு பிரிவில் ‘FPO எக்ஸலன்ஸ் விருது’ வழங்கப்பட்டது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் 5 FPO-க்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த 6 மாதத்தில் மட்டும் 5 விருதுகளையும், பெருமைமிகு அங்கீகாரங்களையும் பெற்றுள்ளன. அதேபோல கோவை மாவட்டம் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு நபார்டு வங்கியின் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான சிறந்த FPO விருது வழங்கப்பட்டது. தமிழகத்தி ல் நபார்டு வங்கியின் ஆதரவில் சிறப்பாக செயல்படும் FPO-க்களில் ஒன்றாக இந்நிறுவனம் அங்கிகரிக்கப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டது.
What's Your Reaction?