வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ ட்ரெய்லர் நவ.26-ல் ரிலீஸ்! 

வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வரும் நவம்பர் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Nov 22, 2024 - 19:15
 0  5
வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ ட்ரெய்லர் நவ.26-ல் ரிலீஸ்! 

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வரும் நவம்பர் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow