ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ முதல் சிங்கிள் எப்படி? - ஈர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்! 

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Nov 22, 2024 - 19:50
 0  5
ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ முதல் சிங்கிள் எப்படி? - ஈர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்! 

சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாடல் எப்படி? - ‘என்னை இழுக்குதுடி’ என தொடங்கும் பாடலை பாடகர் தீ உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார். பொதுவாக தீ பாடும் பாடல்களில் அவரின் குரல் தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இந்தப் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய குரலால் ஸ்கோர் செய்கிறார். மெலிதான குரலில் ‘என்னை இழு இழு இழு என இழுக்குதடி’ என இழுக்கும்போது ஒரு வித வைப் ஒட்டிக்கொள்கிறது. குறிப்பாக ஹம்மிங் பகுதி கரைய வைக்கிறது. ஜாலியான காதல் பாடலாக ரசிக்க வைக்கிறது. ஜெயம் ரவி - நித்யா மேனன் இருவருக்குமான பாடலாக உருவாகியுள்ளது. சிங்கிள் வீடியோவில் தீயின் நடனத்தையும் காண முடிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow