பால்வீதியின் வட்டைச் சுற்றி நெருப்பு வாயுவின் திரை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பால்வீதியின் வட்டைச் சுற்றி நெருப்பு வாயுவின் திரை உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது. 

Nov 22, 2024 - 19:55
 0  4
பால்வீதியின் வட்டைச் சுற்றி நெருப்பு வாயுவின் திரை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: பால்வீதியின் வட்டைச் சுற்றி நெருப்பு வாயுவின் திரை உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வெப்பத்தை உந்தி உமிழும் சூடான வாயுவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மர்மமான ஆதாரங்களை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். எனினும் இது குறித்து இதுவரை விளக்கப்படவில்லை. நமது விண்மீன் மண்டலத்தில் நட்சத்திரங்களை விட வாயுக்கள் அதிகம். தற்போதுள்ள, பெருமளவிலான வாயு இருப்பு நமது விண்மீன் மண்டலத்தில் நட்சத்திர உருவாக்கத்திற்கு முக்கிய ஆதாரமாகும். இத்தகைய அபரிமிதமான வாயு கிடைப்பது இந்த செயல்முறையை இன்றுவரை தக்கவைக்க உதவுகிறது. இருப்பினும், அதன் மெல்லிய தன்மை காரணமாக பார்க்க முடியாவிட்டாலும்கூட வானியலாளர்கள் இந்த வாயுப் பொருளின் கன அளவை கணக்கிட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow