‘தாங்க முடியாத கஷ்டங்கள்...’ -  முகேஷ் உள்பட 7 பேர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை

கேரள அரசின் அலட்சியத்தால் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது தான் கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை அறிவித்துள்ளார். 

Nov 22, 2024 - 19:15
 0  4
‘தாங்க முடியாத கஷ்டங்கள்...’ -  முகேஷ் உள்பட 7 பேர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை

திருவனந்தபுரம்: கேரள அரசின் அலட்சியத்தால் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீது தான் கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை அறிவித்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள சினிமாவில் பெண்கள் பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். பலர் புகார் கொடுத்தனர். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில், நடிகரும் கொல்லம் தொகுதி எம்எல்ஏவுமான முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம்பிள்ளை ராஜூ உள்பட 7 பேர் மீது ஆலுவாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கேரள அரசின் அலட்சியம் காரணமாக தான் அளித்த பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக அந்த நடிகை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow