முட்டாள்தனம் எப்படி நகைச்சுவையாகும்?
‘அதர்ஸ்’ தமிழ்ப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது யூடியூபர் ஒருவர், “ஒரு காட்சியில் நாயகியைத் தூக்கி இருக்கிறீர்கள். அவர் உடல் எடை எவ்வளவு?” என்று கேட்டார்.

‘அதர்ஸ்’ தமிழ்ப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது யூடியூபர் ஒருவர், “ஒரு காட்சியில் நாயகியைத் தூக்கி இருக்கிறீர்கள். அவர் உடல் எடை எவ்வளவு?” என்று கேட்டார். இணைய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த கௌரி கிஷண், இந்தக் கேள்வியைக் கண்டித்திருந்தார்.
இந்நிலையில் ‘அதர்ஸ்’ படத் திரையிடலைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நவம்பர் 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, அந்த யூடியூபர் கௌரி கிஷண் கண்டித்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்குப் பதிலளித்த கௌரி கிஷண் அந்தக் கேள்வி முட்டாள்தனமானது எனவும் தன்னை உருவக்கேலி செய்வதுபோல் இருப்பதாகவும் வாதிட்டார். முந்தைய செய்தியாளர் சந்திப்பின்போது பாதியிலேயே வெளியேற நினைத்ததாகவும் படத்துக்காக அமைதி காத்ததாகவும் சொன்னார்.
What's Your Reaction?