அரியணையில் அமர்ந்த சிறுவன் - பாபர் | கல்லறைக் கதைகள் 14
சிறுவனைச் சுலபமாக வென்றுவிடலாம் என்று படையெடுத்து வந்த அண்டை நாட்டுச் சிற்றரசர்களை வென்று, சின்னஞ்சிறு வயதிலேயே தன் வீரத்தை நிலை நாட்டினார் பாபர். அதோடு நின்றுவிடாமல், 13 வயதில் சாமர்கண்ட் நகரையும் கைப்பற்றினார்.

அரண்மனையின் உள்ளே சயன அறையில் உள்ள படுக்கையில் கடும் காய்ச்சலில் படுத்துக்கொண்டிருக்கிறான் மகன். மகனின் நிலை கண்டு கண்ணில் நீர் வழியப் படுக்கையின் அருகே நின்று கொண்டிருக்கிறார் தந்தை. ராஜ வைத்தியர்கள் எவ்வளவோ போராடியும் காய்ச்சல் குறையவில்லை. காரணம் தெரியவில்லை.
கடவுள் ஒருவரால்தான் தன் மகனைக் காப்பாற்ற முடியும் என்று, கடவுளிடம் மனதுக்குள் மன்றாடிக் கொண்டிருந்த தந்தையிடம் வந்த முஸ்லிம் துறவி, “அரசே… தங்களிடம் உள்ள பொருள்களில் விலை உயர்ந்த பொருள் ஏதாவது ஒன்றை விட்டுக் கொடுத்தால், தங்கள் மகன் பிழைக்க வாய்ப்புண்டு…” என்றார்.
வெகுநேரம் சிந்தனையில் இருந்த தந்தையின் முகத்தில் தெளிவு. எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு, மகனின் படுக்கைக்கு அருகே வந்தார். ரொம்ப நேரம் தியானத்தில் இருந்தார். கடவுளிடம் வேண்டினார். “இறைவனே! என்னிடம் உள்ளதிலேயே விலை மதிப்பற்றதாக நான் நினைப்பது என் உயிரைத்தான். என் உயிரை எடுத்துக்கொள், என் மகனைக் காப்பாற்று” என்று மனமுருகப் பிராத்தனை செய்தார்.
What's Your Reaction?