1,000 ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரிய கோயில்!
சோழநாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைக்கப்பெற்ற பரந்த நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் தஞ்சை. தண் + செய் என்பதே தஞ்சையாயிற்று.

சோழநாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைக்கப்பெற்ற பரந்த நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் தஞ்சை. தண் + செய் என்பதே தஞ்சையாயிற்று. குளிர்ந்த நிலப்பரப்பு என்பதே இதன் பொருள். இவ்வூரில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் நாவுக்கரசர் காலத்தில் தளிக்குளத்தார் கோயில் என்ற சிவாலயம் இருந்து சோழர் காலத்துக்குப் பிறகு அழிந்துள்ளது. ஏறத்தாழ கி.பி.850-ல் விஜயாலயா சோழன் முத்தரைய மன்னன் ஒருவனை வென்று, தஞ்சையைக் கைப்பற்றி சோழ நாட்டின் தலைநகரமாக்கினான்.
கி.பி. 985-ல் மதுராந்தக உத்தமசோழன் மறைந்த பிறகு, சோழப் பேரரசனாக அருண்மொழி மணிமுடி சூட்டினான். முடிசூட்டு விழாவின்போது, ராஜராஜன் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டிக்கொண்டான். காஞ்சி மாநகரில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கயிலாசநாதன் கோயிலின் அழகில் ராஜராஜன் மயங்கினான். அதன் விளைவாக, தஞ்சையில் ராஜராஜீச்சம் எனும் பெருங்கோயிலைக் கட்டினான். பெரியகோயிலை உருவாக்கிய கட்டடக் கலைஞரின் பெயர் வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன்.
What's Your Reaction?