“நாயால் உருவெடுக்கும் மோதல்!” - ‘அலங்கு’ இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் நேர்காணல்

தற்போது, அரசியலர், மருத்துவர் ராமதாஸின் மகள் வழிப் பேரனான குணாநிதி நாயகனாக அறிமுகமாகும் ‘அலங்கு’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி: 

Nov 22, 2024 - 21:05
 0  5
“நாயால் உருவெடுக்கும் மோதல்!” - ‘அலங்கு’ இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் நேர்காணல்

கடந்த காலத்திலிருந்து உயிர்த்தெழுந்து வந்து, நிகழ்காலத்தில் மோதிக்கொள்ளும் முதன்மைக் கதாபாத்திரங்களை ‘உறுமீன்’ படத்தின் மூலம் சுவாரசியம் குன்றாமல் அறிமுகப்படுத்தியவர் எஸ்.பி.சக்திவேல். மெய்நிகர் உலகின் பொய்மைகளால் அல்லல்படும் இரண்டு குடும்பங்களின் கதையாகக் கவனிக்க வைத்த ‘பயணிகள் கவனிக்கவும்’ அவருடைய இரண்டாவது படம். தற்போது, அரசியலர், மருத்துவர் ராமதாஸின் மகள் வழிப்பேரனான குணாநிதி நாயகனாக அறிமுகமாகும் ‘அலங்கு’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

எஸ்.பி.சக்திவேல்

‘அலங்கு’ என்கிற தலைப்பு எதைக் குறிக்கிறது? என்ன கதை, எங்கே நடக்கிறது? - அலங்கு என்பது தமிழ்நாட்டின் மிகப் பழமையான நாட்டு நாய் இனம். சாகும் தறுவாயில் கிடக்கும் ஒரு நாயை நாயகன் காப்பாற்றுவதிலிருந்துதான் கதை தொடங்குகிறது. தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள ஆனைக்கட்டி மலைப் பகுதியில் குடியிருக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடக்கும் கதை. சிறு வயதில் எனக்கு நடந்த ஒரு அனுபவத்திலிருந்து இந்தக் கதைக்கான பொறி உருவானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow