மகனுக்காக உயிர்விட்டவரின் கடைசி ஆசை - பாபர் | கல்லறைக் கதைகள் 15
நான்கு ஆண்டுகள் மட்டுமே டெல்லி அரியணையில் ஆட்சி செய்தார் பாபர். இறக்கும்போது அவருக்கு வயது 48. டெல்லி அரியணையில் அமர்ந்து அவர் ஆட்சி செய்தது 4 ஆண்டுகள்.

பானிபட் போரில் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்த பாபரின் புகழ் பரவியது. சித்தூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் ராணாசிங், இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள தேசப்பற்று கொண்ட மன்னர்களுக்குக் கடிதம் எழுதி 80,000 குதிரை வீரர்கள், 500 யானைகள் கொண்ட ஒரு பெரும்படையைச் சேர்த்துக் கிளம்பினார் பாபரை வெல்ல.
பொ.ஆ (கி.பி) 1527 மார்ச் 16ஆம் தேதி ஆக்ராவின் மேற்கே 20 மைல் தொலைவில் மற்றொரு பெரும் யுத்தம் தொடங்கியது. இந்தப் போரிலும் பாபரின் படை அபார வெற்றியைப் பெற்றது. கந்தேரிக்கோட்டை, வங்காளம் என ஏறக்குறைய மொத்த வட இந்தியாவையும் கைப்பற்றி மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார் பாபர். தன் வாழ்க்கையில் அதிகமான நாள்களைப் போர்க்களங்களில் தொலைத்த பாபர் போர்களில் அதிக நாட்டம் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் சிறந்த மன்னனாகவே திகழ்ந்தார்.
What's Your Reaction?