சபரிமலை பக்தர்களுக்காக சத்திரம் வனப்பகுதியில் சிறப்பு குடில்கள் அமைப்பு!

சத்திரம் வனப்பகுதியில் தங்கும் பக்தர்களுக்கு பனிதாக்காத, விஷ ஜந்துக்கள் ஊடுருவதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தற்காலிக கழிப்பிடம், குளியலறை வசதிகளுக்கான கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன. 

Nov 22, 2024 - 21:35
 0  11
சபரிமலை பக்தர்களுக்காக சத்திரம் வனப்பகுதியில் சிறப்பு குடில்கள் அமைப்பு!

தேனி: சத்திரம் வனப்பகுதியில் தங்கும் பக்தர்களுக்கு பனிதாக்காத, விஷ ஜந்துக்கள் ஊடுருவதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தற்காலிக கழிப்பிடம், குளியலறை வசதிகளுக்கான கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன.

தமிழக - கேரள எல்லையான குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, எருமேலி வழியாக பம்பைக்கு வாகனங்களில் செல்லலாம். மேலும் பாதயாத்திரையாக செல்பவர்கள் வண்டிப்பெரியாறில் இருந்து 14 கி.மீ.தூரம் உள்ள சத்திரத்தை அடைந்து அங்கிருந்து புல்மேடு வனப்பாதை வழியே 12 கி.மீ நடந்து சென்றும் சன்னிதானத்தை அடையலாம். இது வனப்பாதை என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. தற்போது தினமும் சராசரியாக 500 பக்தர்கள் வனப்பாதை வழியே சென்று கொண்டிருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow