மன்னன் கட்டளையும்... குச்சி முறுக்கும்... - இது புன்னைநல்லூர் ஸ்பெஷல்!

திருப்பதிக்கு லட்டு, பழநிக்கு பஞ்சாமிர்தம் என்பது போல புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றால் குச்சி முறுக்கு வாங்கி வருவதை பக்தர்கள் காலம் காலமாக வழக்கமாகி கொண்டுள்ளார்கள்.

Feb 13, 2025 - 18:00
 0  4
மன்னன் கட்டளையும்... குச்சி முறுக்கும்... - இது புன்னைநல்லூர் ஸ்பெஷல்!

திருப்பதிக்கு லட்டு, பழநிக்கு பஞ்சாமிர்தம் என்பது போல புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றால் குச்சி முறுக்கு வாங்கி வருவதை பக்தர்கள் காலம் காலமாக வழக்கமாகி கொண்டுள்ளார்கள். புன்னைநல்லூரிலேயே உற்பத்தி செய்து அங்கேயே விற்பனை செய்யப்படும் இந்த குச்சி முறுக்கு கோயில் வாசலை தவிர்த்து வேறு எங்கும் விற்பனை செய்யப்படுவதில்லை என்பது தான் இந்த குச்சி முறுக்கின் தனித்துவம்.

குச்சி முறுக்கின் கதை: சோழர்களுக்கு பிறகு கி.பி.1670-ம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்டுவந்த மராட்டியர் ஆட்சியில் வெங்கோஜி மகாராஜா சத்ரபதி என்பவர் 1680-ம் ஆண்டில் பாதயாத்திரையாக திருச்சியை அடுத்துள்ள சமயபுரத்துக்கு சென்று அங்குள்ள மாரியம்மனை தரிசனம் செய்தார். அங்கேயே மன்னன் இரவு நேரத்தில் தங்கி உறங்கும்போது மாரியம்மன் மன்னனின் கனவில் தோன்றி `தஞ்சாவூர் அருகே கிழக்கு திசையில் புன்னைகாட்டில் தான் வசித்து வருவதாகவும் தன்னை வந்து வணங்குமாறும்’ கூறி மறைந்தாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow