‘வானம், நீலம், வான்கா, ராஜா..’ - எண்ணமெல்லாம் வண்ணம் கொண்ட ஓர் ஓவியர்!
ரீல்ஸ் செய்பவர்கள் போல் ட்ரெண்டில் இருப்பவற்றை நான் ஓவியமாக்குவதில்லை. இளையராஜாவின் மாஸ்டர்பீஸ்களை எடுத்து, வான்காவின் ஒப்பற்ற ரசனையை கலந்து என் ஓவியத்தின் மூலம் ஒரு விளக்கத்தைத் தர முற்படுகிறேன்.

கரோனா காலத்துக்குப் பின் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையை பழக்கப்படுத்திக் கொண்ட எனக்கு புதிய ஊர் மாற்றமும் ஏற்பட்டது. கோவையில் நான் வசிக்கும் பகுதியில் 4 வீடுகள் இருந்தால் நடுவே ஒரு சிறு அல்லது குறு தொழில் நிறுவனம் இருக்கும். ஒரு பக்கம் செய்திச் சேனல் ஒலியோடு மறுபுறம் டிங், க்ளிங், டங், சர்ர்ரென்ற ஃபேக்டரி ஒலியுடன் மொத்தமாக கேக் தயாரிக்கும் பேக்கரியிலிருந்து எஸ்ன்ஸ் வாசமும் சேர, கூடவே சினிமாப் பாடல்களின் ஒலி சன்னமாகக் கேட்கும். ஷிஃப்டில் இருக்கும் வயதுக்கு ஏற்போர் போல இசையமைப்பாளர்கள் மாறுவார்கள் போல! பாடல்களின் ப்ளே லிஸ்ட் அப்படி யோசிக்க வைக்கும்.
ஆனாலும் பெரும்பாலும் ராஜாவின் பாட்டுகள் இசைக்கப்படும். ஒரு ராஜா ரசிகையாக, காற்றில் வரும் ராஜாவின் கீதங்களைக் கேட்டுக் கொண்டே பணி செய்வது எனக்கு ஒரு சுகமான அனுபவம். அந்த ரசனையால் தான் சமூக வலைதளத்தில் ஒருவருடைய ஓவியப் பகிர்வுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ராஜாவின் பாடல்களுக்கு ஓவியம் மூலம் ஒரு புதிய விஷுவல் எஃபெக்ட் கொடுத்திருந்தார் அந்த பெண் ஓவியர். அவரை அணுகிப் பேசியபோது வானம், கடல், நீல வண்ணம், இளையராஜா, வின்சென்ட் வான்கா என சுவாரஸ்யமாக, துள்ளலாகப் பேசினார்.
What's Your Reaction?