வயதானவர்களை ‘அசைவு நோய்’ அதிகம் பாதிப்பதால் கவனம் அவசியம்!

''வயதானவர்களை 'அசைவு நோய்' அதிகம் பாதிப்பதால் கவனம் அவசியம்'' என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Nov 29, 2024 - 18:15
 0  5
வயதானவர்களை ‘அசைவு நோய்’ அதிகம் பாதிப்பதால் கவனம் அவசியம்!

சென்னை: ''வயதானவர்களை 'அசைவு நோய்' அதிகம் பாதிப்பதால் கவனம் அவசியம்'' என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலக அசைவு நோய் விழிப்புணர்வு தினம் (World Movement Disorders Day) ஆண்டு தோறும் நவம்பர் 29-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. மூளை நரம்பியல் தொடர்பாக ஏற்படும் நோய்களில் நரம்பியல் அசைவு நோயும் ஒன்று. உலகம் முழுவதுமே அசைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2023 நிலவரப்படி உலகில் 21.6 லட்சம் பார்கின்சன் நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2033-ல் 30.15 லட்சமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை லட்சம் பேரில் 15 முதல் 42 பேருக்கு இந்நோய் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow