விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய்யின் மகன் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் தற்போது தன்னுடைய கடைசி படமான ‘விஜய் 69’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோவா சந்தீப் கிஷன் நடிக்கிறார். படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?