ரூ.40 கோடியில் 3,873 நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல்: தமிழக நூலகத் துறைக்கு வாசகர்கள் பாராட்டு

தமிழகத்தில் உள்ள 3,873 பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்படையான முறையில் நூல்கள் கொள்முதல் செய்யப்படுவது நூலகர்கள், வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

May 15, 2025 - 21:00
 0  2
ரூ.40 கோடியில் 3,873 நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல்: தமிழக நூலகத் துறைக்கு வாசகர்கள் பாராட்டு

சென்னை: தமிழகத்தில் உள்ள 3,873 பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்படையான முறையில் நூல்கள் கொள்முதல் செய்யப்படுவது நூலகர்கள், வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் பொது நூலகத் துறையின்கீழ் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவையில் கடந்தாண்டு வெளியிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow