இந்த வெயிலில் சமைப்பது எப்படி இருக்கிறது? - இல்லத் தலைவர்கள் வேதனையும், யோசனையும்!

சமையலறை வெக்கையால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, தலைவலி, குமட்டல், தலைசுற்றல், கால்களில் தசைவலி, ஹீட் ஸ்ட்ரோக் எனப் பல்வேறு பாதிப்புகளுக்கு பெண்கள் ஆளாகக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

May 15, 2025 - 21:00
 0  4
இந்த வெயிலில் சமைப்பது எப்படி இருக்கிறது? - இல்லத் தலைவர்கள் வேதனையும், யோசனையும்!

கோடை வந்துவிட்டாலே வானிலை ஆய்வு மையம், வெயில் சதமடித்த ஊர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். கூடவே, வெப்ப அலை பற்றிய எச்சரிக்கைகளும் வரும். ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டுவிடாமல் இருக்க ஹெல்த் டிப்ஸ்கள்கூட ஏராளமாகக் குவியும். ஆனால், வீட்டினுள் இருக்கும் அடுக்களையில் இருந்து வரும் வெப்ப அலை பற்றியோ, அதனால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் பற்றியோ யாரும் அக்கறை கொள்வதில்லை. ‘கிச்சனில் ஹீட் ஸ்ட்ரோக்கா? கேள்விப்பட்டதே இல்லையே!’ என்று சொல்வோர் தான் அதிகமாக இருப்பர்.

சமையலறை வெக்கையால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, தலைவலி, குமட்டல், தலைசுற்றல், கால்களில் தசைவலி, ஹீட் ஸ்ட்ரோக் எனப் பல்வேறு பாதிப்புகளுக்கு பெண்கள் ஆளாகக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow