வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு?
படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள், எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? ட்ரீம் வெட்டிங் செய்வீர்களா? என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறா பெண்கள்.

வரதட்சிணை கொடுமையால் உயிரிழப்புகள் ஏற்படுவது நம் நாட்டில் அரிதான நிகழ்வொன்றும் அல்ல. அது ஊடகத்தின் ‘பிரதான கவனம்’ பெறுவதுதான் அரிதான நிகழ்வு. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருமணமான 4-ம் நாளில் 24 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கும், 300 பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ரிதன்யா தற்கொலை செய்யப்பட்டதற்கும் இந்தச் சமூகம் ஒரே மாதிரி ஒப்பாரி வைக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே மாதிரியான அக்கறையோடு கருத்துகள் தெளிக்கப்படவில்லை.
எதிலும் அரசியல் என்பதுபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் எதற்கு அதிக கவனம் என்பதிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பெண் என்றாலே பெரும் அரசியல்தான். 100+ சவரன் நகை என்பதால் கேரளத்து விஸ்மயாவையும், தமிழகத்து ரிதன்யாவையும் ஹைலைட் செய்துவிட்டு வெறும் 1 பவுன் நகை என்பதால் திருவள்ளூர் மகேஸ்வரியை துணுக்குச் செய்தியாக்காமல் இருப்போம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு உட்பட்ட நடக்கும் ஒவ்வொரு வரதட்சிணைக் கொடுமையையும் அதே முக்கியத்துவதோடு அணுகும்போது சமூகத்தில் அது அடிக்கடி பேசப்படும் பொருளாகும். வரதட்சிணைக் கொடுமைகளில் ஈடுபட நினைப்போருக்கு சமூகப் பார்வை நம் மீது இருக்கிறது என்று உள்ளூர ஓர் அச்ச உணர்வு ஏற்படக் கூடும் என்ற அக்கறையை பதிவு செய்து கொண்டு, ‘வரதட்சிணை கொடுமைக்கு பெண்கள் ‘பலி’ ஆக பெற்றோரும் காரணமா?’ என்ற வாதத்துக்கு நகர்வோம்.
What's Your Reaction?